Advertisment

“அப்படித்தான் இருக்கும்” - பத்மபூஷன் விருது தொடர்பான விமர்சனம் குறித்து பார்த்திபன்

parthiban about ajith padma bhushan vijay tvk criticism

இயக்கம் மற்றும் நடிப்பு என பயணித்து வரும் பார்த்திபன் இயக்குநராக டீன்ஸ் படத்தை கடைசியாக இயக்கியிருந்தார். நடிகராக பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்திருந்தார். இப்போது மலையாளத்தில் 11 வருடங்கள் கழித்து மீண்டும் அறிமுக இயக்குநர் கே.சி.கௌதமன் இயக்கத்தில் நடிக்கிறார்.

Advertisment

இதனிடையே அவ்வப்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பின்பு செய்தியாளர்களையும் சந்தித்து வருகிறார். அந்த வகையில் இன்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார். இந்த சந்திப்பு அவர் இயக்கவிருக்கும் புதிய படமான ‘54ஆம் பக்கத்தில் மயிலிறகு’ படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக எனக் கூறப்படுகிறது.

Advertisment

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். விஜய்யின் ஜனநாயகன் பட போஸ்டர் வெளியானதை தொடர்ந்து அவரை அடுத்த எம்.ஜி.ஆர். என அவரது ரசிகர்கள் நினைப்பது தொடர்பான கேள்விக்கு “ஒரு பெரிய ஆளுக்கு எய்ம் பண்ணினால் தான் அவருக்கு அடுத்து உள்ள ஆள் அளவிற்காவது போக முடியும். அது மாதிரி எம்.ஜி.ஆரை நினைத்து செயல்பட்டால் தான் அந்த இடத்தை அடையளாம் என்பது அவங்களுடைய விஷயமாக தெரிகிறது. போஸ்டரை பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது. அதே சவுக்கை வாங்கி பயன்படுத்தியிருப்பார்கள் போல” என்றார்.

பின்பு அஜித்திற்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு வாழ்த்து தெரிவித்த அவர், இந்த விருது விஜய்க்கும் அஜித்துக்கும் இடையில் தூண்டிவிடுவது போல் இருப்பதாக கேட்கப்பட்ட கேள்விக்கு, “எனக்கும் அப்படித்தான் இருக்கும் எனத் தோன்றுகிறது” எனப் பதிலளித்தார். முன்னதாக அஜித்திற்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்ட நாளில்(25.01.2025) பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில், “இன்று மதியம் ஒரு இசை பிரபலம், நண்பர் அஜீத் குமாரின் எண் கேட்க,’ஏன்? கேட்டேன், மத்திய அரசு அவரை அவசரமாக அணுக விரும்புகிறது. உடனே கொடுங்கள் என்றது அக்குரல். நல்ல விஷயம்தான் என்பதை புரிந்துக் கொண்டு நான் முயற்சித்தேன்.ஒருவழியாக அவரின் பி.ஆர்.ஓ. சுரேஷ் சந்திராவின் தொடர்பை ஏற்படுத்தினேன். மாலையில் வந்த செய்தி அஜீத் கழுத்துக்கு மாலை என்பது மீறி,’ தலை’க்கு வைர கிரீடம் ஆனது. வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ACTOR AJITHKUMAR ACTOR PARTHIBAN actor vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe