/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/276_7.jpg)
நடிகர் அஜித் குமாரின் தந்தை மணி என்கிற சுப்ரமணியன் (85) நேற்று அதிகாலை காலமானார். சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. தந்தை மறைவால் சோகத்தில் இருக்கும் அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பலரும் நேரில் சென்றோ அல்லது சமூக ஊடகங்களில் பதிவிட்டோ ஆறுதல் கூறி வருகின்றனர்.
நடிகர் விஜய், பார்த்திபன், மிர்ச்சி சிவா, சிம்பு உள்ளிட்டோர் நேரில் சென்று அஜித்திற்கு ஆறுதல் கூறியிருந்தனர். ட்விட்டர் பக்கம் வாயிலாக கமல், விக்ரம், சிம்பு, பிரசன்னா, சிம்ரன் உள்ளிட்ட பலர் ஆறுதல் கூறி பதிவிட்டிருந்தனர். மேலும் அரசியல் தலைவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜயகாந்த், திருமாவளவன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பலரும் ஆறுதல் கூறிபதிவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், இறுதி ஊர்வலத்தில் அஜித்தின் பண்பு குறித்து நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப்பதிவில், "தந்தையின் மறைவின் போது, நண்பர் அஜித் உள்ளூரில் இருந்தது நல்லது. சோகத்தைப் புதைத்துக் கொண்டு வந்தவர்களுக்கு நன்றி சொன்னார். மயானம் செல்லத்தயாரானபோது காரில் அமர்ந்தவர், என் அருகில் சோழா பொன்னுரங்கம் (அமராவதி தயாரிப்பாளர்) நிற்பதைக் கண்டு இறங்கி வந்து நன்றி சொல்லிச் சென்ற பண்பு அவருக்கானது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)