Parking movie experience - dhuja

ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர், இந்துஜாநடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பார்க்கிங்’. இப்படக்குழுவினரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். படத்தில் நடித்தது பற்றிய தங்களது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டனர்.

Advertisment

இந்துஜா பேசியதாவது, “எல்லா வகையான ரசிகர்களையும் ஈர்க்கும் விதமாக படத்தின் கதை இருந்தது. அதோடு வீட்டின் பிரச்சனைகளை பல சமயங்களில் ஒரு தூணைப் போல நின்று கணவன்களுக்கு பக்கபலமாக இருப்பது மனைவிதான். பல உணர்வுகளை அந்த கதாபாத்திரமும் சுமந்து நிற்கும். அதனாலேயே இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

Advertisment

நிறையபடங்கள் கமிட் ஆனாலும் அடுத்தடுத்து படங்கள் படப்பிடிப்பு போகாமல் போனது,பாதியில் நின்று போனது என்று நிலுவை பிரச்சனையானது. அதற்கப்புறம்தான் நானே வருவேனில் நடித்தேன். பிறகு கொரோனா ஊரடங்கு எல்லாம் வந்து நாட்கள் வேகமாக போய்விட்டது. இப்போது பார்க்கிங்கில் நடித்திருக்கிறேன். இனி தொடர்ச்சியாக நடிப்பேன்” என்றார்.