Parking movie experience - Harish Kalyan

ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர், இந்துஜாநடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பார்க்கிங்’. இப்படக்குழுவினரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். படத்தில் நடித்தது பற்றிய தங்களது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டனர்.

Advertisment

ஹரிஷ் கல்யாண் பேசியதாவது, “இதுவரை இந்த மாதிரியான கேரக்டர் எந்த படத்திலும் நடித்ததில்லை. அதற்காகவே இந்த படத்தில் நடிக்க முடிவெடுத்தேன். பார்க்கிங் பிரச்சனை எல்லாருக்கும் வாழ்க்கையில் நடந்திருக்கும், அல்லது நமது நண்பர்களுக்கு நடந்ததை அறிந்திருப்போம். அப்படியானதொரு கதை எல்லாருக்குமே மனதுக்கு நெருக்கமாக இருக்கும் என்று நினைத்தேன். அது சரியாகத்தான் இருந்திருக்கிறது.

Advertisment

ஐடியில் வேலை செய்கிற மிடில் கிளாஸ் பையனைப் போன்ற தோற்றம். இந்த படத்தில் கண்ணாடி போட்டு நடித்திருக்கிறேன். எம்.எஸ். பாஸ்கர் போன்ற அனுபவமிக்க நடிகர்களோடு நடிக்கும்போது நாம டம்மியாக தெரிந்திடக்கூடாது என்பதற்காகவே நிறையமெனக்கிடல் போட்டு நடித்தேன். படத்தில் இரண்டு கதாபாத்திரமுமே ஒரு பேலன்சிங்காகத்தான் இருக்கும்” என்றார்.