park in memory of actor Vivek

Advertisment

விவேக், தமிழ்திரைத்துறையில்வெறும் நகைச்சுவை மட்டுமின்றி, சமூகங்களில் நிகழ்ந்தஅவலங்களைத்தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.நடிப்பைத்தாண்டி பல லட்சமரக்கன்றுகளைத்தமிழகம் முழுவதும் நட்டு வைத்த நடிகர் விவேக், இளைஞர்கள் மரக்கன்றுகளை அதிகளவில் நட வேண்டும் என்றும் ஊக்கப்படுத்தினார். இதனிடையே கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 17- ஆம் தேதி அன்று மாரடைப்பு காரணமாக விவேக் மரணம் அடைந்தார். இவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது நினைவின்காரணமாகவிவேக் வசித்துவந்த சென்னை பத்மாவதிநகர்பகுதியில் உள்ள பிரதான சாலைக்கு 'சின்னகலைவாணர்சாலை'எனப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் மறைந்த நடிகர் விவேக் நினைவாக 'சிறுதுளி' அமைப்பு சார்பில் 'பீஹேப்பி' என்ற பெயரில் வனப் பூங்கா உருவாகிறது. ஒரு ஏக்கர் பரப்பளவில் உருவாகும் இந்த பூங்காவின் பூமி பூஜை நேற்று முன்தினம்பச்சாபாளையத்தில்நடந்த சிறுதுளி அமைப்பின் 19-ம் ஆண்டு விழாவில் நடைபெற்றது.

'சிறுதுளி' அமைப்பு, மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்நினைவாகக்கோவைபச்சாபாளையத்தில்எஸ்.பி.பி. வனம் என்ற பூங்காவை உருவாக்கியது. இதனை நடிகர் விவேக் தொடங்கிவைத்தார்.எஸ்.பி.பாலசுப்பிரமணியம்அவர்களைத்தொடர்ந்து தற்போது மறைந்த நடிகர் விவேக் அவர்களுக்கும் வனப் பூங்கா அமைக்கவுள்ளது 'சிறுதுளி' அமைப்பு.