யூ-ட்யூபில்தனது நடிப்பு திறமையை நிரூபித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி பின்பு திரைத்துறையில் நுழைந்து பயணித்து வருபவர்கள்அதிகரித்து கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில்யூ-ட்யூபில்அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளையும் கிண்டல் செய்து தற்போதுபல்வேறு விஷயங்களை நகைச்சுவை கலந்து வீடியோவாக வெளியிட்டு வந்த கோபி மற்றும் சுதாகர்வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்துள்ளார்கள்.
இதனைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக இருவரும்க்ரவுட் பண்டிங் முறையில் நிதியை திரட்டி 'பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஒரு படத்தை தயாரிக்க முயற்சித்தனர். அதன்மூலம் ஒரு தொகை திரட்டி‘ஹே மணி கம் டுடே, கோ டுமாரோ’ தலைப்பில் படம் உருவாவதாகவும்அதற்கானடைட்டில் லுக் போஸ்டரையும்வெளியிட்டிருந்தனர். இப்படத்தைஎஸ்ஏகேஎன்பவர் இயக்க ஜேக்ஸ் பிஜோய் இசையமைப்பதாக இருந்தது.
பின்புகொரோனாமற்றும் ஊரடங்கு காரணமாகஇப்படம் தாமதம் ஆவதாகவும், விரைவில் இந்தப் படத்தை தொடங்குவதாகவும் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இருவரும் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தைவிஷ்ணு விஜயன் என்ற அறிமுக இயக்குநர் இயக்கசென்னை பிரசாத் லேப்பில் இன்று பூஜை நடந்துள்ளது. இவர்களுக்கு தற்போது ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.