Skip to main content

அக்டோபரில் வரும் காஜல் அகர்வால் 

Published on 27/07/2018 | Edited on 27/07/2018
kajal agarwal

 

 

 

'குயீன்' படத்தின் ரீமேக்கை மீடியன்ட் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் மனு குமரன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். தமிழில் "பாரிஸ் பாரிஸ்", தெலுங்கில் "தட்ஸ் மஹாலக்ஷ்மி", கன்னடத்தில் "பட்டர்ப்ளை", மலையாளத்தில் "ஜாம் ஜாம்" என்றும் படத்திற்கு பெயர்சூட்டப்பட்டுள்ளது. தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, கன்னடத்தில் பருல்யாதவ் மற்றும் மலையாளத்தில் மஞ்சிமா மோகன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தமிழ் மற்றும் கன்னடத்தில் நடிகர் மற்றும் இயக்குனரான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். தெலுங்கில் பிரஷாந்த் வர்மா இயக்குகிறார். மலையாளத்தில் நீலகண்டா இயக்குகிறார். ஐரோப்பவில் நடைபெற்ற இப்படங்களின் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது. 

 

 

 

இந்நிலையில் தயாரிப்பாளர் மனுகுமரன் பேசும்போது... "படத்தின் தரத்தை பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. அனைத்து நடிகர்களும் தாங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களின் தன்மையை அறிந்து சிறப்பாக நடித்துள்ளனர். நடிகர்களின் வித்தியாசமான பரிநாமங்கள் கண்டிப்பாக ரசிகர்களை கவரும்" என்றார். இதையடுத்து இப்படத்தின் துணை தயாரிப்பாளரும் கன்னடத்தில் உருவாகும்  "பட்டர்ப்ளை" படத்தின் நாயகியுமான பருல்யாதவ் பேசும்போது... "இவ்வளவு பெரிய மற்றும் அரிய வகையான ஒரே நேரத்தில் நான்கு மொழிகளில் திரைப்படங்களை தயாரிக்கும் திட்டத்தை வெற்றிக்கரமாக முடித்திருப்பது மிகவும் திருப்தியளிப்பதாகவுள்ளது" என்றார். அமித் திரிவேதி இந்த நான்கு படங்களுக்கும் இசையமைத்துள்ளார். குயீன் படத்திற்க்கும் இசையமைத்தவர் அமீத் திரிவேதி என்பது குறிப்பிடத்தக்கது. பாஸ்கோ - சீசர் மற்றும் கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைத்து கொடுத்துள்ளனர். அக்டோபர் மாதம் "பாரிஸ் பாரிஸ்", "தட்ஸ் மஹாலக்ஷ்மி", "பட்டர்ப்ளை", "ஜாம் ஜாம்" படங்கள் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நரேந்திர மோடியால் காஜல் அகர்வாலுக்கு வந்த சோதனை 

Published on 09/04/2019 | Edited on 09/04/2019

பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை படமான 'பி.எம்.நரேந்திரமோடி' படத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தேர்தல் சமயத்தில் இந்த படத்தை திரையிட கூடாதென தேர்தல் கமிஷனை வற்புறுத்தின.

 

kajal

 

ஆனால் இந்த படத்திற்கு இதுவரை எந்த தடையும் விதிக்காததால் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கிடையே இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இதை பார்த்த நடிகை காஜல் அகர்வால் ..."விவேக் ஓபராயின் தோற்றத்தை என்னால் நம்ப முடியவில்லை. படத்தை பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். நரேந்திர மோடி படம் கண்டிப்பாக நன்றாக ஓடும்" என்று நரேந்திர மோடி படத்தை வரவேற்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு சமூக வலைத்தளத்தில் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. அவரை பலர் கண்டித்து வருகின்றனர். ஆனால் விவேக் ஓபராய் மற்றும் பா.ஜனதா கட்சியினர் காஜல் அகர்வாலை பாராட்டி வருகின்றனர்.

 

Next Story

மாரத்தான் போட்டிக்கு அழைக்கும் காஜல் அகர்வால்

Published on 31/12/2018 | Edited on 31/12/2018
kajal agarwal

 

 

'குயீன்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'பாரீஸ் பாரீஸ்' படத்தை அடுத்து தற்போது 'இந்தியன் 2' படத்தில் நடிப்பதற்காக தயாராகி வரும் நடிகை காஜல் அகர்வால் நடிப்புடன் மாரத்தான் போட்டிகளிலும் ஆர்வம்காட்டி வருகிறார். கடந்த ஆண்டு ‘அமைதியை யோசி’ என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்துகொண்ட அவர் டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் 16வது முறையாக வரும் ஜனவரி 20ஆம் தேதி மும்பையில் நடத்தும் மாரத்தானில் அனைவரும் கலந்துகொள்ள காஜல் அகர்வால் அழைப்பு ட்விட்டரில் விடுத்துள்ளார். அதில்.... "இந்த முறை நான் பழங்குடியின விளையாட்டுத்துறை முன்னேற்றத்துக்காக 2019 டாடா மும்பை மாரத்தானில் கலந்துகொள்கிறேன். அரக்குவில் உள்ள பழங்குடியினருக்கு அவர்களது விளையாட்டுத்துறை உள்கட்டமைப்பு மேம்படவும், திறமை வாய்ந்த பழங்குடியின விளையாட்டு ஆளுமைகளுக்குச் சக்தி வாய்ந்த உணவு கிடைத்திடவும் வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.