Advertisment

சென்சாரில் ஏகப்பட்ட வெட்டு...! ரிவைசிங் கமிட்டிக்கு செல்லும் 'பாரீஸ் பாரீஸ்'!

ஹிந்தியில் வெற்றி பெற்ற 'குயின்' திரைப்படத்தை, மீடியண்ட் பிலிம் சார்பாக தயாரிப்பாளர் மனுகுமரன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறார்.

Advertisment

kajal aggarwal

தமிழில் காஜல் அகர்வால் நடிப்பில் 'பாரீஸ் பாரீஸ்' எனவும், தெலுங்கில் தமன்னா நடிப்பில் 'தட்ஸ் மகாலட்சுமி' எனவும், கன்னடத்தில் பருல் யாதவ் நடிப்பில் 'பட்டர்ஃபிளை' எனவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகன் நடிப்பில் 'ஜாம் ஜாம்' எனவும் பெயரிடப்பட்டுள்ளது. கன்னடத்திலும், மலையாளத்திலும் சென்சார் கிடைத்த நிலையில் தமிழ் ரீமேக்கான 'பாரீஸ் பாரீஸ்' திரைப்படத்திற்கு சென்சார் போர்டு பல ஆடியோ, வீடியோ வெட்டுகள் மற்றும் காட்சி இருட்டடிப்புகளுக்கு பரிந்துரைத்து இருக்கிறது. இந்நிலையில் இதனை மறுபரிசீலனை செய்வதற்கு ஏதுவாக ரிவைசிங் கமிட்டியின் பார்வைக்கு எடுத்து செல்வது என தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்திருக்கிறது. இதன் மூலம் விரைவில் இப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kajalagarwal queen paris paris
இதையும் படியுங்கள்
Subscribe