இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஹிந்தி நடிகை பரினீதி சோப்ரா சாய்னா நேவாலாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கிய நிலையில் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு பரினீதி சோப்ரா கழுத்தில் காயம் அடைந்தார்.

Advertisment

parineeti

இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து பரினீதி சோப்ரா சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... ''எனக்கு படப்பிடிப்பில் எதிர்பாராத விதமாக கழுத்தில் காயம் ஏற்பட்டு உள்ளது. இதற்காக பிசியோதெரபி சிகிச்சை எடுத்தேன். இப்போது தேறி வருகிறேன்” என்று பதிவிட்டு கழுத்தில் காயம்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு 15 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.