மகனுக்கு பிடித்த யூடியூபர்ஸ்; வீட்டிற்கு அழைத்த நெப்போலியன்

369

நடிகர், முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சரான நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் மூத்த மகன் தனுஷ், சிறுவயதிலே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்ததை அடுத்து அதற்காக சிகிச்சைக்கு இந்தியாவில் இருந்து அமெரிக்க சென்றவர், பின்பு அங்கேயே தனது குடும்பத்துடன் குடியேறிவிட்டார்.

கடந்த ஆண்டு தனுஷுக்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்தார். திருமணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பலர் அவதூறு பரப்பிய நிலையில் அதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். தொடர்ந்து தன் மகனுக்காக நிறைய விஷயங்களை செய்து வரும் நெப்போலியன் தற்போது மகனுக்கு பிடித்த யூட்யூபர்களான பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகரை வீட்டிற்கு அழைத்து வந்து மகிழ்ச்சி படுத்தியுள்ளார். 

இது தொடர்பாக நெப்போலியன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “சென்ற வாரம் அமெரிக்காவில் நடைபெற்ற FeTNA நிகழ்ச்சியில் கலந்து கொள்தற்காக வருகைதந்த இன்றைய இளைய தலைமுறைகள் அதிகம் விரும்பி பார்க்கும் You Tube-ல் தொடர்ந்து வரும் பரிதாபங்கள் என்ற நிகழ்ச்சியின் கதாநாயகர்கள், கோபி & சுதாகர் இருவரையும் நானும் FeTNA நிகழ்ச்சிக்கு சென்றதால் சந்திக்க முடிந்தது. எங்கள் முத்த மகன் தனுஷ்க்கு மிகவும் பிடித்தவர்கள் என்பதால் எங்கள் வீட்டிற்க்கு அழைத்திருந்தேன், எனது அழைப்பை ஏற்று எங்கள் வீட்டிற்க்கு வருதை தந்து தனுஷ்க்கு மகிழ்ச்சியையும், எங்களுக்கு மன நிறைவையும் தந்தார்கள். நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்கள் தனுஷுடன் ஜாலியாக உரையாடும் வீடியோவையும் இணைத்துள்ளார். 

America napoleon youtuber
இதையும் படியுங்கள்
Subscribe