“வாக்களிக்காதவர்களுக்கு வரி அதிகரிக்க வேண்டும்” - பிரபல நடிகர் யோசனை

Paresh Rawal said increase in tax for those who don't vote

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் வாக்கு பதிவு, மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், ஒவ்வொரு கட்டங்களாக நடந்து வருகிறது. இதுவரை நான்கு கட்ட வாக்குபதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு மே 7ஆம் தேதி குஜராத், மராட்டிம், கோவா உள்ளிட்ட 94 தொகுதிகளுக்கும் நான்காம் கட்ட வாக்குபதிவு மே 13ஆம் தேதி தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட 96 தொகுதிகளுக்கும் நடைபெற்றது.

இதையடுத்து இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதன்படி உத்தரப் பிரதேசத்தில் 14 தொகுதிகளுக்கும், மகாராஷ்டிராவில் 13 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகளுக்கும், பீகாரில் 5 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 5 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் 3 தொகுதிகளுக்கும், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதிகளுக்கும், லடாக் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதிகளுக்கும் என6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Paresh Rawal said increase in tax for those who don't vote

வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். திரை பிரபலங்கள் அக்‌ஷய் குமார், அமீர் கான், ஹேமா மாலினி, சுனில் ஷெட்டி, வருண் தவான், ஃபர்ஹான் அக்தர், சோயா அக்தர், பரேஷ் ராவல், சுதர்மேந்திரா எனப் பலரும் வாக்களித்தனர். அந்த வகையில் நடிகர் பரேஷ் ராவல், மும்பையில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசாங்கம் இதைச் செய்யவில்லை. அதைச் செய்யவில்லை எனச் சொல்பவர்கள், இன்று வாக்களிக்கவில்லை என்றால், அதற்கு நீங்கள்தான் பொறுப்பு, அரசாங்கம் அல்ல. அப்படி வாக்களிக்கத் தவறியவர்களுக்கு வரி அதிகரிப்பு அல்லது வேறு சில தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும்” எனக் கூறினார். இவர் பாலிவுட்டில் பல்வேறுபடங்களில் நடித்துள்ளார். தமிழில் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் வில்லனாக நடித்திருந்தார். நடிப்பதைத்தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் அகமதாபாத் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

actor LOK SABHA ELECTION 2024
இதையும் படியுங்கள்
Subscribe