Advertisment

இருட்டு அறை இயக்குநருடன் இணைந்த பிரபுதேவா!

dvdbdsbdsbdsbd

பன்முகத் திறமை கொண்ட நடிகர் பிரபுதேவா கைவசம் தற்போது ‘பொன் மாணிக்கவேல்’, ‘தேள்’, ‘யங் மங் சங்’, ‘பகீரா’ உள்ளிட்ட படங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்குத் தயாராக உள்ளன. இதற்கிடையே நடிகர் பிரபுதேவா பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து ‘தபாங் 3’, ‘ராதே’ ஆகிய படங்களை இயக்கினார். இந்தப் படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நடிகர் பிரபுதேவா அடுத்ததாக ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’, ‘இரண்டாம் குத்து’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். ஆக்சன் என்டர்டெயினராக உருவாகும் இப்படத்தை மினி ஸ்டுடியோ சார்பாக வினோத் குமார் தயாரிக்கிறார். நாயகிகளாக வரலட்சுமி மற்றும் ரைசா வில்சன் நடிக்கும் இப்படத்துக்கு டி. இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (15.07.2021) பூஜையுடன் தொடங்கியது.

Advertisment

Prabhu Deva santhosh p jayakumar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe