தூள் திரைப்படத்தில் ''சிங்கம் போல'' என்ற பாடலின் மூலம் பிரபலமானவர் என்றாலும் அவர் அதற்கு முன்பே பல்வேறு நாட்டுப்புற பாடல்கள் பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பரவை முனியம்மா. பல தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார்.

Advertisment

paravai muniyamma

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த அக்டோபர் மாதம் மூச்சு திணறல் அதிகரித்ததன் காரணமாக வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவரை நடிகர் அபி சரவணன் தான் கவனித்துக்கொண்டார்.

Advertisment

இந்நிலையில் அபிசரவணன் நடிப்பில் வெளியான மாயநதி படத்தை பார்ப்பதற்கு பரவை முனியம்மா விருப்பம் தெரிவித்ததால் மதுரையில் உள்ள திரையரங்கு ஒன்றிற்கு அழைத்து சென்று பார்க்க வைத்துள்ளனர்.

பரவை முனியம்மா உடல்நலிவை பொருட்படுத்தாமல், வீல் சேரில் தன் குடும்பத்துடன் சென்று இப்படத்தை பார்த்துள்ளார். நெடுநாட்களுக்குப் பிறகு திரையரங்கு சென்று படம் பார்ப்பது மனதுக்கு நிம்மதி அளிப்பதாக பரவை முனியம்மா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.