Skip to main content

ஆங்கில படங்களை திணறடித்த ஆசிய படம்... ஆஸ்காரில் வரலாற்று சாதனை...

Published on 10/02/2020 | Edited on 10/02/2020

ஆண்டுதோறும் ஹாலிவுட் சினிமாத்துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான 92 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வெகு விமர்சியாக நடைபெற்றுள்ளது. தொகுப்பாளர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் இந்த விழாவில் பிரபல திரைப்பட நடிகர்கள் நடிகைகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் ஜோக்கர், பாரசைட் உள்ளிட்ட 9 படங்கள் பரிந்துரையில் இடம்பெற்றுள்ளன. அயல்நாட்டு திரைப்படமான பாரசைட் இந்தமுறை அதிக விருதுகளை பெறும் என்று முன்னமே பலரும் கணித்தனர் அதுபோல இந்த வருடத்திற்கான ஆஸ்கர் விருது விழாவில் நான்கு விருதுகளை தட்டிச்சென்றுள்ளது. அயல்நாட்டு படம் இப்படி பல விருதுகளை குவித்திருப்பது வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது. 
 

parasite

 

 

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான முதல் ஆஸ்கர் விருதினை பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் தட்டிச் சென்றார். "ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் ஹாலிவுட்" எனும் திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய பிராட் பிட்டுக்கு 'சிறந்த துணை நடிகர்' எனும் பிரிவில் ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

  • சிறந்த நடிகருக்கான விருது ஜோக்கர் படத்தின் கதாநாயகன் ஆக்கின் ஃபீனிக்ஸ் ஆஸ்காரை தட்டிச் சென்றார். இந்த படத்திற்காக பல சர்வதேச விருதுகளை ஆக்கின் பெற்றிருக்கிறார்.
  • சிறந்த நடிகைக்கான விருதினை ரினே ஸெல்வேகர் என்பவருக்கு ஜூடி படத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. 
  • சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருதினை பாரசைட் படத்திற்காக பாங் ஜூன் ஹோ பெற்றார்.
  • சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருதினை பாரசைட் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அயல்நாட்டு திரைப்படம் சிறந்த படமாக ஆஸ்காரில் தேர்வானது இதுவே முதல் முறை. 
  • சிறந்த துணை நடிகைக்கான விருதை 'மேரேஜ் ஸ்டோரி' எனும் படத்தில் நடித்த லாரா டெர்ன் பெற்றார். 
  • சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை 'லிட்டில் வுமன்' திரைப்படத்தில் பணியாற்றியதற்காக ஜாக்குலின் டர்ரன் பெற்றார்.
  • சிறந்த பாடலுக்கான விருதினை எல்டன் ஜான், பெர்னீ டாபின் ஆகியோர் ராக்கெட்மேன் என்னும் பாடலுக்காக பெற்றனர். 
  • சிறந்த பின்னணி இசைக்கான விருதினை ஜோக்கர் படத்திற்காக ஐஸ்லாந்தை சேர்ந்த ஹில்டர் குட்னடாட்டிர் பெற்றார்.
  • உலகம் முழுவதும் பிரபலமடைந்த பாரசைட் படத்திற்கு சிறந்த சர்வதேச திரைப்படம் என்னும் விருது வழங்கப்பட்டது.
  • சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரத்திற்காக பாம்ஷெல் படத்திற்கு ஆஸ்கார் வழங்கப்பட்டுள்ளது.
     
day night

 

 

  • சிறந்த விஎஃப்எக்ஸ்க்கான ஆஸ்கார் விருதினை 1917 படம் தட்டிச் சென்றது.
  • சிறந்த படத்தொகுப்புக்கான ஆஸ்கார் விருதினை  ‘ஃபோர்ட் வெர்சஸ் ஃபெராரி’ படத்திற்காக  மைக்கெல் மஸ்கர், ஆண்ட்ரூ பக்லேண்ட் ஆகியோர் பெற்றனர்.
  • சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கார் விருதினை  ‘1917’ படத்திற்காக  ராஜர் டீகின்ஸ் பெற்றார். கடந்த வருடம்  ‘பிளேட் ரன்னர் 2049’ படத்திற்காக ரோஜர் டீக்கின்ஸ் ஆஸ்கார் விருதினை தட்டிச் சென்றார். 
  • சிறந்த ஒலிக் கலவைக்காக 1917 படத்திற்கு  மார்க் டெய்லர், ஸ்டூவர்ட் வில்சன் ஆகியோர் ஆஸ்கார் விருதினை பெற்றனர்.
  • சிறந்த ஒலித் தொகுப்புக்காக ஃபோர்ட் வெர்சஸ் ஃபெராரி படத்திற்கு டொனால்ட் சில்வெஸ்டர் ஆஸ்கார் விருதினை பெற்றார்.
  • சிறந்த உறுதுணை நடிகைக்காக ஆஸ்கார் விருதினை  ‘மேரேஜ் ஸ்டோரி’ படத்திற்காக லாரா டெர்ன் பெற்றார்.
  • ‘லேர்னிங் டு ஸ்கேட்போர்ட் இன் எ வார்ஸோன்’ என்னும் படத்திற்கு சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.
  • அமெரிக்கன் ஃபேக்டரி படத்திற்கு சிறந்த ஆவணப் படம் என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • சிறந்த ஆடை வடிவமைப்புக்காக லிட்டில் வுமன் படத்திற்கு ஜாக்வலின் டுர்ரான் விருதினை பெற்றார்.
  • சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்காக ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ படத்திற்கு ஆஸ்கார் வழங்கப்பட்டுள்ளது.
  • சிறந்த குறும்படத்திற்காக தி நெய்பர்ஸ் விண்டோ குறும்படத்திற்கு ஆஸ்கார் வழங்கப்பட்டுள்ளது.
  • சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கார் விருது ஜோஜோ ராபிட் படத்தின் எழுத்தாளர் டைகா வைடிடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • சிறந்த அசல் திரைக்கதை, பாரசைட் படத்திற்காக பாங் ஜூன் ஹோ, ஹான் ஜின் வொன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • சிறந்த அனிமேஷன் குறும்படம், ஹேர் லவ் குறும்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
  • சிறந்த அனிமேஷன் திரைப்படம், டாய் ஸ்டோரி 4 படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆஸ்கர் 2025 விருது விழா விவரம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
oscar 2025 update

திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் ஆண்டுதோறும், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 96ஆவது ஆஸ்கர் விருது விழா கடந்த மார்ச் 10ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. 

இதில் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவிற்கு இந்தியாவிலிருந்து மலையாளப் படமான '2018' படம் அனுப்பப்பட்டது. ஆனால், இப்படம் இறுதிப் பரிந்துரை பட்டியல் வரை செல்லவில்லை. அதற்கு முந்தைய சுற்றிலேயே வெளியேறியது. இதையடுத்து இந்தியாவில் நடந்த கதையை வைத்து எடுக்கப்பட்ட ‘டு கில் எ டைகர்’ என்ற ஆவணப்படம், சிறந்த ஆவணப்படம் பிரிவில் நாமினேஷனுக்கு தேர்வானது. இப்படம் ஜார்க்கண்டில், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தனது மகளுக்கு நீதிப் போராட்டத்தை நடத்திய தந்தை குறித்து எடுக்கப்பட்டதாகும். ஆனால் இப்படமும் விருது பெறவில்லை.

இவ்விருது விழாவில் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்பி நடித்துள்ள ஓபன்ஹெய்மர் படம் 13 பிரிவுகளில் போட்டியிட்டு 7 பிரிவுகளில் வென்று பலரது பாராட்டைப் பெற்றது. இந்த நிலையில் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் 97ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 2ஆம் தேதி (இந்தியாவில் மார்ச் 3 ) நடக்கும் என அறிவித்துள்ளது. விருதுக்கு நாமினேஷனான பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது. 

Next Story

சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கும் படம் - இணையும் இரண்டு ஆஸ்கர் இசையமைப்பாளர்கள்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
sai pallavi as sita in ramayanam movie Hans Zimmer And AR Rahman to create music

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல ஹீரோயினாக வலம் வரும் சாய் பல்லவி, இப்போது தமிழில் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தில் கதாநாயகியாகவும், நாக சைதன்யாவின் 23-வது படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இதையடுத்து பாலிவுட்டில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

ராமாயணக் கதையைக் கொண்டு தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு மது மந்தனா தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் ராமாயணம் கதையை எடுக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதற்கான ப்ரீ-ப்ரொடக்‌ஷன் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் ராவணன் கதாபாத்திரத்தில் கே.ஜி.எஃப் புகழ் யஷ்ஷும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்பட்டது. இதனிடையே சீதை கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடிப்பதாகக் கூறப்பட்டது நினைவுகூரத்தக்கது. 

அனுமான் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படும் சூழலில் மூன்று பாகங்களாக இப்படம் உருவாகுவதாக பேசப்படுகிறது. இத்தகவல் அனைத்தும் உறுதியாகிவிட்டதெனவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படும் நிலையில் படத்தின் இசையமைப்பாளர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்கர் வென்ற இரண்டு இசையமைப்பாளர்கள் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

sai pallavi as sita in ramayanam movie Hans Zimmer And AR Rahman to create music

ஹாலிவிட்டில் தி லையன் கிங், தி டார்க் நைட், இன்டெர்ஸ்டெல்லர் உள்ளிட்ட உலகலளவில் கவனம் பெற்ற ஏகப்பட்ட படங்களுக்கு இசையமைத்த ஹன்ஸ் ஜிம்மரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக திரை வட்டாரங்களில் தெரிவிக்கின்றன. மேலும் ஏ.ஆர் ரஹ்மானிடமும் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஹன்ஸ் ஜிம்மர், தி லையன் கிங் மற்றும் டியூன் உள்ளிட்ட படங்களுக்காக இரண்டு முறையும் ஏ.ஆர் ரஹ்மான் ஸ்லம் டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.