Skip to main content

ஆஸ்கருக்கு தகுதியற்ற படமா  ‘பாரசைட்’?

Published on 10/02/2020 | Edited on 10/02/2020

ஆண்டுதோறும் ஹாலிவுட் சினிமாத்துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான 92 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது. தொகுப்பாளர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் இந்த விழாவில் பிரபல திரைப்பட நடிகர்கள், நடிகைகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். 
 

bong joon ho

 

 

அயல்நாட்டு திரைப்படமான பாரசைட் இந்தமுறை அதிக விருதுகளை பெறும் என்று முன்னரே பலரும் கணித்தனர். அதுபோல இந்த வருடத்திற்கான ஆஸ்கர் விருது விழாவில் ஆறு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்த படம் நான்கு விருதுகளை தட்டிச்சென்றுள்ளது. ஆஸ்கர் வரலாற்றிலேயே சிறந்த படத்திற்கான விருதினை அயல்நாட்டு திரைப்படத்திற்கு வழங்கியிருப்பது இதுவே முதல்முறையாகும். 

தென்கொரிய படமான  ‘பாரசைட்’ படத்தை பாங் ஜூன் ஹோ இயக்கியிருந்தார். தென் கொரியாவின் நிலப்பரப்பிலிருக்கும் மக்கள், அவர்களின் பேச்சு, பழக்கவழக்கம் என்று அனைத்தையுமே யதார்த்ததுடன் சேர்த்து, உலகளாவிய பிரச்சனையான வர்க்கப் பிரச்சனையையும் இப்படத்தில் பேசியிருக்கிறார் இயக்குனர். பொதுவாக அரசியல், சமூக அக்கறைக்கொண்ட படங்களில் ஓவராக மக்களின் மீது அக்கறைக்கொண்டு பிரச்சார நெடி அடிக்கும், ஆனால் பாரசைட்டில் அப்படியில்லாமல் யதார்த்தமான வர்க்க பிரச்சனையையும், ஏழைக்கு பணக்காரர்கள் மீது இருக்கும் பார்வையையும், பணக்காரர்களுக்கு ஏழைகள் மீது இருக்கும் பார்வையையும் நேர்த்தியாக திரைக்கதையில் அமைத்திருப்பது இப்படத்தின் சிறப்பு. இயக்குனர் இந்த ஏற்றத்தாழ்வை வைத்து ஒரு சாராரின் உணர்வுகளை தூண்டிவிடும் வகையான படத்தை எடுக்க நினைக்காமல், காமெடியாகவும் த்ரில்லராகவும் கையாண்ட விதம் பெரும்பாலானவர்களை கவர்ந்தது. 
 

day night


உலக அரங்கில் பல முக்கிய சர்வதேச விருது விழாக்களிலும் கலந்துகொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது இப்படம். இதன்பின் அமெரிக்காவில் ரிலீஸ் செய்யப்பட்ட பாரசைட், கடந்த வருடம் தியேட்டர்களில் வசூலை வாரிக்குவித்தது. இப்படி பல விஷயங்களால்தான் ஆஸ்கர் நிகழ்ச்சியிலும் ஆங்கில படங்களுக்கு நிகராக நின்று போட்டி போட முடிந்திருக்கிறது இப்படத்தால்.  ஆசிய கண்டத்திலிருந்து சிறந்த கருத்தையும், கருவையும் கொண்டு யுனிவர்சல் படமாக ஆஸ்கரில் போட்டிப்போட்ட பாரசைட் படம் சிறந்த படம், சிறந்த சர்வதேச படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குனர் உள்ளிட்ட விருதுகளை தட்டிச் சென்றது.

சிறந்த இயக்குனருக்கான விருதினை பெற்ற பிறகு பேசிய பாரசைட் இயக்குனரும்,  “ஆஸ்கர் அனுமதித்தால் ரம்பத்தை எடுத்து ஐந்து துண்டாக விருதை பிரித்தெடுத்து என்னுடன் பரிந்துரைக்கப்பட்ட மற்ற இயக்குனர்களுக்கு தருவேன்” என்று வெகுளியாக பேசினார். மேலும், நான் பள்ளியில் படிக்கும்போது மார்டின் ஸ்கோர்சஸியை பார்த்துதான் சினிமா கற்றுக்கொண்டேன், இன்று அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ள சிறந்த இயக்குனருக்கான பட்டியலில் நானும் இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. அதேபோல பாரசைட் படத்தை தன்னுடைய ஃபேவரைட் லிஸ்ட்டில் வைத்திருந்த குவிண்டின் டரண்டினோவுக்கும் நன்றி” என்று தெரிவித்தார்.
 

parasite

 

 

இப்படி பல சர்வதேச மேடைகளில் சாதனை படைத்துவிட்டு தற்போது ஆஸ்கரில் வரலாறு படைத்திருக்கும் இந்த படம், சிறந்த படம் என்ற ஆஸ்கர் விருதுக்கு தகுதியானதல்ல என்று சிலர் சமூக வலைதளங்களில் பதிவிடுவது, திரைப்படத்துறையில் புரையோடிப்போயுள்ள வர்க்கக் கண்ணோட்டத்தை வெளிகாட்டுவதாகவே பார்க்கப்படுகிறது. இந்த பதிவுகள் அனைத்தும், ஆசியாவை சேர்ந்த ஒருவர் இப்படி விருதுகளை பெற்றுவிட்டார் என்பதற்காகவா? அல்லது ஒரு சிறிய பிராந்தியத்தின் படைப்பு, உலகளாவிய சந்தை கொண்ட ஒரு படைப்புலகின் தயாரிப்பை மிஞ்சிவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையின் வெளிப்பாடா? என பல கேள்விகளை நம்முள் ஏற்படுத்தி செல்கின்றன. திரைப்படத்திற்கு மொழியில்லை என்பதுதான் ஒவ்வொரு திரைப்பட கலைஞனும் சொல்வது, அப்படி இருக்கையில் ஏன் இந்த வெறுப்பு பேச்சு. ஒரு படத்தை விமர்சிப்பது என்பது அனைவரும் செய்வதே. ஆனால் அந்த விமர்சனத்தின் வரையறைகளை கடந்து பாரசைட் படம் சந்திக்கும் இந்த விமர்சனங்கள், ஹாலிவுட் படங்களை உலக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு, மற்ற உலக மொழி படங்களை ஹாலிவுட் ரசிகர்கள் எற்றுக்கொள்ள மறுக்கின்றனரோ என்ற கேள்வியையும் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் மீது தாக்குதல்; ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
America announced action against Iran to incident on Israel

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படையைச் சேர்ந்த மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஆனால், ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிரியா, லெபனான் எல்லைப் பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

ஈரான் தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை, அமெரிக்காவோடு பிரிட்டனும் கைகோர்த்து அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஜேனட் யெல்லன் கூறுகையில், “வரும் நாட்களில் ஈரானுக்கு எதிராகக் கூடுதல் பொருளாதாரத் தடைகள் நடவடிக்கை எடுப்போம். எந்த மாதிரியான தடைகள் விதிக்கப்படும் என்பது குறித்து விரைவில் விவரங்கள் வெளியிடப்படும்” என்று கூறினார்.

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்; களமிறங்கிய அமெரிக்கா!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
America sided with Israel against Iran

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனால், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

America sided with Israel against Iran

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.