Advertisment

‘பாரசைட்' பட நடிகர் மர்மமான முறையில் மரணம்

parasite movie actor lee sun kyun passed away

பாங் ஜூன் ஹோ இயக்கத்தில் கொரியன் மொழியில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் பாரசைட். 2020ல் நடந்த ஆஸ்கர் விருதில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம், சிறந்த இயக்குநர் உள்பட நான்கு விருதுகளை வென்றது. மேலும் உலகம் முழுவதும் கவனத்தை பெற்றது. இப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் லீ சுன் கியூன். இவர் தற்போது மர்மமான முறையில் மறைந்துள்ளார்.

Advertisment

இன்று (27.12.2023) சியோல் நகரில் உள்ள ஒரு பார்க்கில் தனது காரின் உள்ளே இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மரணம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். லீ சுன் கியூன் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமீப காலமாக அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் வீட்டில் தற்கொலை குறிப்பு போன்ற ஒரு தகவலை எழுதி வைத்துவிட்டுச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

சில மாதங்களுக்கு முன்பு வரை, லீ சுன் கியூன் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில், போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

passed away actor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe