இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் கடந்த மாதம் 4ஆம் தேதி வெளியான படம் ‘பறந்து போ’. இப்படத்தில் கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி மற்றும் மாஸ்டர் மிதுல் ரியான் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள நிலையில் செவன் ஹில்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளன. மியூசிக்கல் காமெடிப் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா கவனித்துள்ளார்.
டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வழங்கிய இப்படம் கடந்த பிப்ரவரியில் நடந்து முடிந்த 54வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ப்ரீமியர் செய்யப்பட்டது. அங்கு நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து வெளியான திரையரங்க வெளியீட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வெற்றிமாறன், அட்லீ, நயன்தாரா உள்ளிட்ட திரை பிரபலங்களின் பாராட்டுகளையும் பெற்றது.
இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஜியோ ஹாட்ஸ்டாரில் ஆகஸ்ட் 5ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழைத் தாண்டி மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி மொழியில் பார்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.