‘லப்பர் பந்து’ பட வெற்றிக்கு பிறகு கெத்து தினேஷ் என அழைக்கப்படும் அட்டகத்தி தினேஷ் ‘தண்டகாரண்யம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் கலையரசனும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பா.ரஞ்சித் தனது ‘நீலம் புரொடைஷன்’ பேனரில் தயாரித்துள்ளார். இப்படத்தை அதியன் ஆதிரை இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தினேஷை வைத்து ‘குண்டு’ படத்தை இயக்கியிருந்தார். 

Advertisment

தண்டகாரண்யம் படத்தில் ரித்விகா, ஷபீர், பாலா சரவணன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்க ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக், கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியாகியிருந்தது. அதை பார்க்கையில் காடுகளின் பின்னணியில் அதை வைத்து நடக்கும் அரசியலை இப்படம் பேசுவது போல் தெரிந்தது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது.  

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி அடுத்த மாதம் 19ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் “உண்மை முழங்கும், உலகமெங்கும்” என்ற கேப்ஷனுடன்  ரிலீஸ் தேதியுடன் கூடிய ஒரு புதிய போஸ்டரையும் பகிர்ந்துள்ளார்.