Advertisment

யோகிபாபுவின் பிறந்தநாளுக்கு பா.ரஞ்சித்தின் பரிசு

pa.ranjith presents yogi babu starring 'bommai nayagi' movie first look poster released

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் பா.ரஞ்சித் 'நீலம் புரொடக்சன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் தயாரிப்பில் தற்போது'J.பேபி', 'பொம்மை நாயகி' உள்ளிட்ட சில படங்கள் உருவாகி வருகிறது. இதில் 'பொம்மை நாயகி' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். 'நீலம் புரொடக்சன்ஸ்' நிறுவனத்தோடு இணைந்து 'யாழி ஃபிலிம்ஸ்' தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷான் இயக்குகிறார். சுபத்ரா, ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி என்பவர் இசையமைக்கிறார்.

இந்நிலையில் 'பொம்மை நாயகி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்போஸ்டரில் யோகிபாபு மற்றும் ஒரு குழந்தை இடம்பெற்றுள்ளது. இப்படம் அப்பாவிற்கும் மகளுக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

இதனிடையே முதன்மை மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் யோகிபாபு இன்று (22.07.2022) தனது 38-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பா.ரஞ்சித் 'பொம்மை நாயகி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டதோடு யோகிபாபு பிறந்தநாள் வாழ்த்து டேக்கை பகிர்ந்துள்ளார்.

Advertisment

actor yogi babu bommai nayagi pa.ranjith
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe