/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/99_24.jpg)
பா.ரஞ்சித், 'சார்பட்டா பரம்பரை' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் காளிதாஸ் ஜெய்ராம் கதாநாயகனாக நடிக்க, துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். 'யாழி ஃபிலிம்ஸ்' மற்றும் 'நீலம் ப்ரொடக்ஷன்ஸ்' இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தென்மா என்பவர் இசைமைத்துள்ளார். முழுக்க முழுக்க காதல் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து தற்போது இறுதி கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பலரின் கவனத்தை ஈர்த்தது.
'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் கதாபாத்திரம் அறிமுகம் செய்யும் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது கதாபாத்திரத்தின் தனி போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் 'இனியன்', துஷாரா விஜயன் 'ரெனே', கலையரசன் 'அர்ஜுன்' என்ற கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தின் நடித்துள்ள நடிகர் நடிகைகளின் கதாபாத்திரத்தின் பெயர்களையும் படக்குழு வெளியிட்டிருந்தது. இதனையடுத்து வெங்கட் பிரபு படக்குழுவிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)