/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/09_48.jpg)
பா. ரஞ்சித்தின் 'நீலம் புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'J.பேபி'. இப்படத்தில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ் மற்றும் லொள்ளு சபா மாறன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டோனி பிரிட்டோ என்பவர் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் வெளியானது. மேலும் 'நெடுமரம் தொலைந்ததே' என ஒரு பாடலின் லிரிக் வீடியோ அதற்கு முன்னதாக வெளியானது. இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இப்படம் மார்ச் 8 ஆம் தேதி ஆகியநாளை யு சான்றிதழுடன் வெளியாகவுள்ளது. இதையொட்டி செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.
இதனைத் தொடர்ந்து இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில் படக்குழுவினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். படம் முடிந்து பலரும் இயக்குநருக்கு பாராட்டு தெரிவிக்க அதனால் எமோஷனலான இயக்குநர் சுரேஷ் மாரி கண்ணீர் விட்டு அழுதார். பின்பு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)