pa.ranjith in 'j.baby' teaser released

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் பா.ரஞ்சித். இவர் 'நீலம் புரொடக்சன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் 'பரியேறும் பெருமாள்', 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு', 'ரைட்டர்' மற்றும் 'குதிரைவால்' போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. அடுத்ததாக 'அட்டகத்தி' தினேஷ் நடிக்கும் 'J.பேபி' படத்தை தயாரித்து முடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்க ஊர்வசி மற்றும் லொள்ளு சபா மாறன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டோனி பிரிட்டோ என்பவர் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் 'நெடுமரம் தொலைந்ததே' பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இந்நிலையில் 'J.பேபி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. கலகலப்பாக தன் குடும்பத்தோடு வாழ்கிற ஒரு அம்மா காணாமல் போகிறார். அவரை குடும்பத்தினர் எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதை விவரிப்பது போல் வெளிவந்திருக்கும் இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது

Advertisment