Paramporul movie Trailer Released

கவி கிரியேஷன்ஸ் மனோஜ் & கிரிஷ் தயாரிப்பில் சி. அரவிந்த் ராஜ் இயக்கத்தில் சரத்குமார்‍‍ - அமிதாஷ் நடிக்கும் படம்'பரம்பொருள்'. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க, 'ரிச்சி' படத்தின் மூலம் பாராட்டுகளைப் பெற்ற ஒளிப்பதிவாளர் பாண்டி குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ள, 'டான்', 'சாணிக் காயிதம்', 'ராக்கி', 'எட்டு தோட்டாக்கள்' படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்துள்ள நாகூரான் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். கலை இயக்குநராக குமார் கங்கப்பன், சண்டைக்காட்சி பயிற்சியாளராக தினேஷ் சுப்பராயன், நடன இயக்குநராக சதீஷ் கிருஷ்ணன், ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி இப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.

Advertisment

இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. சிலைக் கடத்தல் பின்னணியில் உள்ள கதைக்களத்தில் அமைந்துள்ள 'பரம்பொருள்' படத்தின் பரப்பரப்பான டிரெய்லரை மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம் வெளியிட்டனர்.

Advertisment

இப்படத்தின் இயக்குந‌ர் சி. அரவிந்த் ராஜ் நிகழ்வில் பேசியதாவது, “இக்கதையை சொன்னவுடன் சரத்குமாருக்கும், அமிதாஷுக்கும் மிகவும் பிடித்தது. சின்ன பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட இப்படம் தயாரிப்பாள‌ர்களின் ஆதரவால் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. அனைவரும் திரையரங்குகளில் 'பரம்பொருள்' திரைப்படத்தை பார்த்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து ஆதரவை தர வேண்டும். தயாரிப்பாளர்களுக்கும், படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றி” என்றார்.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பேசுகையில், “எனக்கு இந்த படம் மிகவும் பிடித்துள்ளது, அனைவரும் ரசிப்பார்கள் என்றும் நம்புகிறேன். அனைவரும் திரையரங்குகளில் பார்க்க வேண்டும்” என்றார்.