/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/15_24.jpg)
24 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் திருஞானம் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பரமபத விளையாட்டு’. கதாநாயகியை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில், நந்தா, ரிச்சர்ட், ஏ.எல்.அழகப்பன், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கடந்த ஆண்டே இப்படம் வெளியாக இருந்த நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. கரோனா நெருக்கடிநிலை தளர்வுகளுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்ட போதிலும் படத்தின் ரிலீஸ் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், ‘பரமபத விளையாட்டு’ திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட முடிவெடுத்த தயாரிப்பு தரப்பு,டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதனையடுத்து, படத்தின்உரிமையை டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியது.
தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதியன்று ‘பரமபத விளையாட்டு’ திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. திரிஷா நடிப்பில் தயாராகி வரும் ‘பரமபத விளையாட்டு’, ‘கர்ஜனை’, ‘ராங்கி’ ஆகிய படங்கள் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இப்படம் ஓடிடி-யில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us