/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/11_246.jpg)
இன்ஃபினிட் பிக்சர்ஸ் சார்பில் சபரிஸ் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பரமன்’. விவசாயிகளின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் 'ஜெய்பீம்', 'பரியேறும் பெருமாள்' உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள சூப்பர் குட் சுப்பிரமணி கதையின் நாயகன் ‘பரமன்’ ஆக நடித்திருக்கிறார்.
பழ கருப்பையா வில்லனாக நடிக்க, ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் வையாபுரி நடித்துள்ளார். மேலும் ஹலோ கந்தசாமி, விஜே அர்ச்சனா, மீசை ராஜேந்திரன், அசோக் தமிழ், சத்யா, ஜெயச்சந்திரன், கார்த்திக் பிரபு, சஞ்சய், மது உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமீம் அன்சாரி இசையமைத்துள்ளார். படத்தின் கதையை இதய நிலவன் எழுதியுள்ளார். பாடல்களை வேல்முருகன், முகேஷ் ஆகியோர் பாடியுள்ளனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், எஸ்.ஏ சந்திரசேகர், பி வாசு உள்ளிட்ட பலரும் இணைந்து வெளியிட்டு உள்ளனர். இயக்குநர் சீமான், இப்படத்தின் டிரைலரையும் பார்த்துவிட்டு, இப்படம் சமூகத்திற்கு தேவையான ஒரு முக்கிய கருத்தை சொல்ல வருகிறது எனக் கூறி தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இதையடுத்து விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)