/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/45_82.jpg)
ஹரிஷங்கர், சங்கீதா கல்யாண் நடிப்பில் எழில் பெரியவேடி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பராரி. இப்படத்தை இயக்குநர் ராஜு முருகன் வழ்னக்குகிறார். இப்படத்தின் இயக்குநர் எழில் பெரியவேடி ராஜு முருகனின் உதவி இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு ஷேன் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
இப்படம் தொடர்பாக இயக்குநர் எழில் பெரியவேடி பேசுகையில், “ஜிப்ஸி படம் முடியும் போது இந்தப் படத்தின் கதையை எழுதினேன். அதை நிறைய தயாரிப்பாளர்களிடமும் சொல்லியிருக்கிறேன். கதை நல்லாயிருப்பதாக சொல்வார்கள். ஆனால் க்ளைமாக்ஸ் அவர்களுக்கு பிடிக்கவில்லை. எல்லாரும் இதையே சொல்லியதால் கதை மீது எனக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டது. படமாக எடுக்கவும் ஒரு தயக்கம் இருந்தது.
இந்தப் படத்தின் கதை முழுக்க முழுக்க வட தமிழ்நாட்டில் இருக்கும் இரண்டு விழிம்பு நிலை சமூகங்கள் பற்றியக் கதை. இது வரைக்கும் வட தமிழகத்தில் சொல்லப்படாத அரசியலை சொல்லியிருக்கிறோம். அதாவது இரண்டு சமூகமாக இருப்பவர்கள் ஒரே குல சாமியை கும்பிடுகின்றனர். இதன் பின்னணியில் இந்த கதை எழுதியுள்ளேன்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)