Advertisment

தொழிலதிபருடன் பிரபல சீரியல் நடிகை திருமணம்...

papri ghosh

பைரவா, சர்கார், விஸ்வாசம், சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் பாப்ரி கோஷ். எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய டூரிங் டாக்கீஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேற்கு வங்கத்தை சேர்ந்தவரான பாப்ரி பெங்காலி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர்.

Advertisment

நாயகி, பாண்டவர் இல்லம், பூவே உனக்காக, சித்தி 2, மகராசி உள்ளிட்ட தமிழ் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். பாப்ரி கோசும், தொழில் அதிபர் ஒருவரும் காதலித்து வருவதாக ஏற்கனவே பல செய்திகள் வெளியாகின. இதனை அவர் மறுக்கவில்லை. இந்த நிலையில் காதலரை பாப்ரி கோஷ் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.

Advertisment

இந்த திருமணத்தில் இருவரது குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். கரோனா பரவல் காரணமாக திருமணத்துக்கு யாரையும் அழைக்காமல் எளிமையாக நடத்தியதாக கூறப்படுகிறது. திருமண புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது. மணமகன் பெயரை பாப்ரி கோஷ் வெளியிடவில்லை.

actor vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe