fswaf

2009ஆம் ஆண்டு 'பசங்க' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் இயக்குனர் பாண்டிராஜ். இவர் இப்படம் மூலம் தேசிய விருது பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதையடுத்து 'மெரினா', 'இது நம்ம ஆளு', 'கடைக்குட்டி சிங்கம்' மற்றும் 'நம்ம வீட்டுப் பிள்ளை' படங்கள் மூலம் பிரபலமான இவர் நேற்று தனது 44ஆவது பிறந்தநாளை கரோனா பொதுமுடக்கம் காரணமாக வீட்டிலேயே எளிமையாகக் கொண்டாடினார். இவருக்குத் திரையுலகினர் பலரும் வாழ்த்து கூறிய நிலையில் அவர்களுக்கு நன்றி சொல்லி சமூகவலைத்தளத்தில் பாண்டிராஜ் பதிவிட்டுள்ளார். அதில்...

Advertisment

Advertisment

''இந்தச் சிறப்பான நாளில் என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அனைத்து ஊடக மக்களுக்கும், திரைப்பட ஆளுமைகளுக்கும், என் நலம் விரும்பிகளுக்கும், எனக்குப் பிடித்த அனைத்து நட்சத்திரங்களின் ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கும் என் நன்றிகள். ஒரு ஆச்சரியமான அறிவிப்புடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.