'சூரரைபோற்று' படத்திற்குபிறகு சூர்யா,தற்போது 'நவரசா' எனும்அந்தாலஜியில் நடித்து வருகிறார். இதனைகெளதம்வாசுதேவ்மேனன்இயக்கிவருகிறார். இதன் பிறகு சூர்யா, 'பசங்க', 'நம்மவீட்டுபிள்ளை' உள்ளிட்ட படங்களை இயக்கியபாண்டிராஜோடு இணைகிறார்.
சூர்யாவின் 40 வதுபடமாகஉருவாகவுள்ள இப்படத்தை, சன்பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில்சூர்யாவுக்கு ஜோடியாக, ரஷ்மிகா மந்தனாநடிப்பதாகவும், சூர்யா ஜோடியாக நடிக்க,சிவகார்த்திகேயனின் டாக்டர்படத்தில் நடித்து வரும் பிரியங்கா மோகன் ஒப்பந்தம் செய்யப்ட்டுள்ளதாகவும்தகவல்கள்பரவிய நிலையில்,படத்தின் இயக்குனர் பாண்டிராஜ், வதந்திகளை நம்பவேண்டாம் எனகேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அன்பான நண்பர்களே, சூர்யா 40 படத்தை பற்றிய உங்கள் ஆர்வம், எங்களுக்கு புரிகிறது. தயவு செய்து வதந்திகளை நம்பாதீர்கள். படத்தின் நடிகர்- நடிகைகளையும்,படக்குழுவுயையும் தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிக்கும். உங்களுக்கு சிறந்ததை தர, நாங்கள் கடினமாக உழைத்து வருகிறோம்" என கூறியுள்ளார்.