Skip to main content

கரோனா பாதிப்பு...! நிதியுதவி அளித்த இயக்குனர் பாண்டிராஜ்!

Published on 20/04/2020 | Edited on 20/04/2020

கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது.

 

vsv

 

மேலும் சினிமா துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு, ஃபெப்சியின் வேண்டுகோளுக்கு பின் சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர். அந்தவகையில் தற்போது பசங்க, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை பட இயக்குனர் பாண்டிராஜ் வேலையின்றி கஷ்டப்படும் ஃபெப்சி தொழிலார்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். அதேபோல் ஓய்வின்றி உழைத்துவரும் காவல் துறையினருக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் அவ்வப்போது திரைத்துறையினர் உதவி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“விஜயகாந்த்தை இப்படி கஷ்டப்படுத்தாதீர்கள் ப்ளீஸ்...” - பிரபல இயக்குநர் வேண்டுகோள்

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
director pandiraj about vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில் நுரையீரல் பாதிப்புக்காக கடந்த மாதம் 18 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் பூரன குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். அதில் ஒரு ரசிகர் விஜயகாந்த்திற்குத் தனது உறுப்புகளைத் தரத் தயாராக இருப்பதாக வெளிநாட்டிலிருந்து வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் திரைப் பிரபலங்களும் அவர் உடல் நலம் தேறி வர வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், சிகிச்சை முடிந்து நல்லபடியாக வீடு திரும்பினார்.

இதையடுத்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டார். அவரைப் பார்த்து அவரது தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். மேடையில் நாற்காலியில் அமர்ந்த அவர் திடீரென்று சரிந்து விழு பார்த்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரைப் பிடித்து உட்கார வைத்தனர். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், விஜயகாந்த் உடல்நலம் குறித்து இயக்குநர் பாண்டிராஜ் பேசியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “கேப்டன் விஜயகாந்த்துக்கு இப்பொழுது சரியான ஓய்வு தேவை. அவர் பூரண குணமடையும் வரை அவரை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தாதீர்கள் ப்ளீஸ். பிடித்த ஒரு நல்ல மனிதரை இப்படி பார்க்க ரொம்பவே  கஷ்டமா இருக்கு” என வேண்டுகோள் வைத்துள்ளார். 

Next Story

இயக்குநர் பாண்டிராஜிடம் ரூ. 1.89 கோடி பண மோசடி - போலீசார் அதிரடி

Published on 05/05/2023 | Edited on 05/05/2023

 

director pandiraj land issue

 

பிரபல திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இப்போது சென்னையில் வசித்து வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் 1 ஏக்கர் 43 சென்ட் பரப்பளவில் உள்ள நிலத்தை விற்பனை செய்வதாக புதுக்கோட்டை பூங்கா நகரைச் சேர்ந்த நில தரகர் குமார் என்பவர் உறுதியளித்துள்ளார். அதன்படி பாண்டிராஜ் முதல் தவணையாக ரூ.40 லட்சம் பணத்தை குமாருக்கு கொடுத்துள்ளார். 

 

இதனைத் தொடர்ந்து குமார் இன்னும் 50 சென்ட் நிலத்தை விற்பனை செய்வதாக பாண்டிராஜிடம் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் ரூ.27 லட்சம் பணத்தை குமாரிடம் பாண்டிராஜ் கொடுத்துள்ளார். இப்படி 2013 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை நிலம் தொடர்பாக ரூ.1 கோடியே 89 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். இந்த நிலையில் புதுக்கோட்டைக்குச் சென்று தான் வாங்கவுள்ள நிலத்தை பார்வையிட சென்றுள்ளார் பாண்டிராஜ். அங்கு சென்று பார்த்த பிறகு, அந்த இடம் வேறொரு நபரின் பெயரில் இருப்பது தெரிய வந்துள்ளது.

 

இதனால் அதிர்ச்சியடைந்த பாண்டிராஜ் இது தொடர்பாக புதுக்கோட்டை குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், குமாரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் அந்த இடம் ஏற்கனவே நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இந்த நில மோசடி தொடர்பான வழக்கில் நில தரகர் குமாரை கைது செய்துள்ளனர் போலீசார்.