‘பே வாட்ச்’ படத்தில் நடித்து பிரபலமான நடிகை பமீலா ஆண்டர்சன். தற்போது இவருடைய வயது 52. கடந்த 12 நாட்களுக்கு முன்பு ஜான் பீட்டர்ஸ் என்ற ஹாலிவுட் தயாரிப்பாளரை ஐந்தாவது திருமணம் செய்துகொண்டார். தயாரிப்பாளர் பீட்டர்ஸ்க்கும் பமீலா ஐந்தாவது மனைவி.

இவருக்கு முன்பாக பாடகர்கள் டாம்மி லீ, கிட் ராக், ரிக் சாலமன் ஆகியோரை திருமணம் செய்து, விவாகரத்து செய்திருந்தார் பமீலா. இந்நிலையில்தான் ஐந்தாவதாக பீட்டர்ஸை அண்மையில் திருமணம் செய்துகொண்டது உலகம் முழுவதும் பேசப்பட்டது. மலிபு நகரில், தனிப்பட்ட முறையில் நடந்த திருமண நிகழ்ச்சியில், நெருக்கமான நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
திருமணம் நடைபெற்று இரண்டு வாரங்களே ஆன நிலையில் இந்த ஜோடி பிரிவதாக முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து பமீலா வெளியிட்ட அறிக்கையில், “திருமண உறவில் நமக்கு என்ன வேண்டும். ஒருவரிடம் இருந்து மற்றொருவர் எதை எதிர்பார்க்கிறோம் என்பதை பரிசீலிக்க சில காலமாகும். ஆகையால், நாங்கள் இருவரும் ஒருமனதாக பிரிய முடிவு செய்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.