
‘ஓரம் போ’, ‘வாத்தியார்’, ‘6.2’ போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன், ஃபிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், என ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகும் பேன் இந்திய படம் 'பாம்பாட்டம்'. தயாரிப்பாளர் வி.பழனிவேல் தயாரிக்கும் இப்படத்தை, ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’, ‘சவுகார்பேட்டை’, ‘பொட்டு’ மற்றும் சன்னி லியோனின்‘வீரமாதேவி’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். ‘நான் அவன் இல்லை’ படம் மூலம் பிரபலமான நடிகர் ஜீவன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், கதாநாயகிகளாக ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் இருவரும் நடிக்கிறார்கள்.
தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இளவரசி நாகமதி கதாபாத்திரத்தில், ஹிந்தி நடிகை மல்லிகா ஷராவத் நடிக்கிறார். 1800,1947,1990 என மூன்று கால கட்டங்களில் நடக்கும் வரலாற்று பின்னணி கொண்ட ஹாரர் மற்றும் திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மல்லிகா ஷெராவத் குதிரையில் வருவது போல் வெளியாகியுள்ள போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சுமன், சரவணன், ரமேஷ்கண்ணா, வெங்கட் என ஏரளாமான நட்சத்திரங்கள் நடித்துக்கொண்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, கரோனா அச்சுறுத்தலுக்கு நடுவே தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)