Advertisment

பழம் பெரும் நடிகர்களின் வீட்டை வாங்கும் பாக். அரசு! 

pak

Advertisment

இந்தி சினிமாவின் பழம் பெரும் நடிகர்கள் ராக் கபூர் மற்றும் திலீப் குமார். இவர்கள் இருவரும் இந்தியா சுதந்திரம் பெருவதற்கு முன்பு பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் பிறந்தவர்கள். இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்ற பின்னர் சுதந்திர இந்தியாவிலேயே இவர்கள் இருவரும் வசித்து வந்தனர். தற்போது இவர்களின் மூதாதையர் வீடுகள் பெஷாவரில் உள்ளனர்.

இதுகுறித்து தொல்பொருள் துறை தலைவர் டாக்டர் அப்துஸ் சமத் கூறுகையில், “பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்திலுள்ள திலீப் குமார், ராஜ் கபூர் ஆகியோரின் வீடுகள் பாரம்பரியம் மிக்கவை. அந்த வீடுகளை அரசே வாங்க தற்போது முடிவு செய்துள்ளது. ராஜ் கபூரின் வீடு பெஷாவர் நகரில் அமைந்துள்ளது. இது கபூர் ஹவேலி என அழைக்கப்படுகிறது. ராஜ் கபூர் வீடு 1918 முதல் 1922ஆம் ஆண்டுகளுக்கு இடையே கட்டப்பட்டது. இந்த வீட்டில்தான் ராஜ்கபூர் பிறந்தார்.

பெஷாவரின் கிஸ்ஸா கவானி பஜார் பகுதியில் திலீப் கபூர் வீடு அமைந்துள்ளது. திலீப் கபூரின் வீடு 2014-ல் தேசிய பாரம்பரியசின்னமாக அறிவிக்கப்பட்டது. இந்த வீட்டை இடித்து, வணிக வளாகமாக மாற்ற அதன் உரிமையாளர்கள் முடிவு செய்தனர். இதை தொல்பொருள் ஆராய்ச்சிதுறையினர் தடுத்துவிட்டனர். இந்த 2 வீடுகளையும் வாங்கிக்கொள்ள பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

Bollywood
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe