Skip to main content

பழம் பெரும் நடிகர்களின் வீட்டை வாங்கும் பாக். அரசு! 

Published on 29/09/2020 | Edited on 29/09/2020
pak

 

 

இந்தி சினிமாவின் பழம் பெரும் நடிகர்கள் ராக் கபூர் மற்றும் திலீப் குமார். இவர்கள் இருவரும் இந்தியா சுதந்திரம் பெருவதற்கு முன்பு பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் பிறந்தவர்கள். இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்ற பின்னர் சுதந்திர இந்தியாவிலேயே இவர்கள் இருவரும் வசித்து வந்தனர். தற்போது இவர்களின் மூதாதையர் வீடுகள் பெஷாவரில் உள்ளனர்.

 

இதுகுறித்து தொல்பொருள் துறை தலைவர் டாக்டர் அப்துஸ் சமத் கூறுகையில், “பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்திலுள்ள திலீப் குமார், ராஜ் கபூர் ஆகியோரின் வீடுகள் பாரம்பரியம் மிக்கவை. அந்த வீடுகளை அரசே வாங்க தற்போது முடிவு செய்துள்ளது. ராஜ் கபூரின் வீடு பெஷாவர் நகரில் அமைந்துள்ளது. இது கபூர் ஹவேலி என அழைக்கப்படுகிறது. ராஜ் கபூர் வீடு 1918 முதல் 1922ஆம் ஆண்டுகளுக்கு இடையே கட்டப்பட்டது. இந்த வீட்டில்தான் ராஜ்கபூர் பிறந்தார்.

 

பெஷாவரின் கிஸ்ஸா கவானி பஜார் பகுதியில் திலீப் கபூர் வீடு அமைந்துள்ளது. திலீப் கபூரின் வீடு 2014-ல் தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. இந்த வீட்டை இடித்து, வணிக வளாகமாக மாற்ற அதன் உரிமையாளர்கள் முடிவு செய்தனர். இதை தொல்பொருள் ஆராய்ச்சி துறையினர் தடுத்துவிட்டனர். இந்த 2 வீடுகளையும் வாங்கிக்கொள்ள பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிவசேனாவில் இணைந்த பாலிவுட் நடிகர்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Bollywood actor joined Shiv Sena

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க. மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார்.

இத்தகைய சூழலில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் மூத்த பழம்பெரும் பாலிவுட் நடிகர் கோவிந்தா சிவசேனாவில் இன்று (28.03.2024) தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் சிவசேனாவில் இணைந்தது குறித்து பாலிவுட் நடிகர் கோவிந்தா கூறுகையில், “நான் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை அரசியலில் இருந்தேன். அதாவது 14வது மக்களவை காலம் ஆகும். தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் அரசியலுக்கு வந்திருப்பது ஆச்சரியமான தற்செயல் நிகழ்வு ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.  சிவசேனாவில் இணைந்த நடிகர் கோவிந்த மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

‘டிஜிட்டல் இந்தியா’ - அதிர்ச்சி அனுபவத்தைப் பகிர்ந்த நடிகை

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
hina khan beggar incident

பாலிவுட்டில் தொலைக்காட்சி தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் மற்றும் ஆல்பம் வீடியோக்களிலும் நடித்து வருகிறவர் நடிகை ஹினா கான். மேலும் டேமேஜ்டு 2 வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் யாசகர் ஒருவரின் செயல் குறித்து பதிவிட்டிருந்தார். அது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பதிவில், “நான் சிக்னலில் கிரீன் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நபர் என் கார் கதவை தட்டினார். கொஞ்சம் பணம் கொடுத்து உதவ முடியுமா என்று கேட்டார். என்னிடம் பணம் இல்லை என்றேன். வீட்டில் தம்பி, தங்கைகள் இருக்கிறார்கள். தயவு செய்து ஏதாவது உதவுங்கள் என்றார். நான் மீண்டும் என்னிடம் பணம் இல்லை. ஸாரி என்றேன். கூகுள் பே இருக்கு மேடம். அந்த நம்பர் தருகிறேன் என்றார். அது எனக்கு அதிர்ச்சியளித்தது. 

பின்பு அவருக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்ப முயற்சிக்கும் போது, ஒரு வாரத்துக்கான ரேஷன் பொருட்கள் வாங்க பணம் அனுப்புங்க மேடம் என்றார். இது என்னை மேலும் அதிர்ச்சியாக்கியது. டிஜிட்டல் இந்தியா தற்போது சிறந்ததாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.