Skip to main content

நடிகர் ஜானி சின்ஸ் புகைப்படத்தை காஷ்மீர் போராட்டக்காரர் என்று பதிவிட்ட பாக். அதிகாரி....

Published on 04/09/2019 | Edited on 04/09/2019

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370, 35Aஐ நீக்கி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது. அத்துடன் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  அறிவித்தார்.
 

jhonny sins

 

 

இதனையடுத்து பாகிஸ்தான் இந்த முடிவை கடுமையாக கண்டித்து, எதிர்ப்பு தெரிவித்தது. உலக நாடுகளிடம் இந்த விஷயத்திற்கு உதவுங்கள் என்று கேட்டுக்கொண்டது. ஆனால், யாரும் முன்வரவில்லை. பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா மட்டும் உதவியது. 

இந்நிலையில், பெல்லடி குண்டு விபத்தால் காஷ்மீரை ஒருவர் பாதிக்கப்பட்டுவிட்டார் என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் பகிர்ந்துள்ள புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆம், பார்ன் பட நடிகர் ஜானி சின்ஸ் நடித்துள்ள ஒரு ஆபாச படத்தில், ஜானி சின்ஸ் சிகிச்சை பெறும்போது டாக்டர் கட்டிபிடித்து அழுவதுபோல ஒரு காட்சியை படம் எடுத்து சமூக வலைதளத்தில் யாரோ கிண்டலாக பெல்லட் தாக்குதலில் காயம் அடைந்தவர் என்று பதிவிட்டுள்ளார். அதன் உண்மை தன்மையை அறியாத இந்தியாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் அப்துல் பாசித், ரீட்வீட் செய்துள்ளார்.
 

zombi


இதனிடையே அந்த ட்விட்டை சிறிது நேரத்தில் அவர் நீக்கிவிட்ட போதிலும், அது இணையவாசிகள் கையில் சிக்க தற்போது இந்தியாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் அப்துல் பாசிதை கடுமையாக கலாய்த்து வருகிறார்கள். நேசமணி ஹேஸ்டேக் போல ஜானி சின்ஸ் பேரை பயன்படுத்தி பிரே ஃபார் ஜானி பின்ஸ் என்று சிலர் பதிவிட்டு வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மீண்டும் மாநிலமாகும் ஜம்மு காஷ்மீர்: கட்சிகளுடன் விரைவில் பிரதமர் மோடி ஆலோசனை!

Published on 22/06/2021 | Edited on 22/06/2021

 

narendra modi

 

கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்டது.  மேலும், ஜம்மு காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளுக்கு  முன்பே ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர்கள் முன்னெச்சரிக்கையாக வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டனர்.

 

மேலும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டது. அதன்பிறகு  கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இன்டர்நெட் சேவை படிப்படியாக பழைய நிலைக்குத் திரும்பியது. இந்த சூழலில் கடந்த 18ஆம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீரின் துணைநிலை ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அப்போது ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து ஆராயப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்பிறகு அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

 

இதன்பிறகு வரும் 24ஆம் தேதி  பிரதமர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீரில் சட்டபேரவைத் தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

 

ஜம்மு காஷ்மீருக்கு சரியான சமயத்தில் மீண்டும் மாநில அந்தஸ்த்து வழங்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

இது தேசத் துரோகம் கிடையாது - காஷ்மீர் விவகார வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

Published on 05/03/2021 | Edited on 05/03/2021

 

supreme court

 

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370ஐ, மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு ரத்து செய்தது. அதற்கு ஜம்மு காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் மூத்த அரசியல் தலைவர் ஃபாரூக் அப்துல்லா மீது, தேசத் துரோக சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், ஃபாரூக் அப்துல்லா அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370ஐ, சீனா அல்லது பாகிஸ்தான் உதவியோடு திரும்பப் பெறுவோம் என பேசியதாகவும், எனவே அவர் மீது தேசத் துரோக சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "மத்திய அரசால் எடுக்கப்பட்ட முடிவிலிருந்து வேறுபடும் ஒரு பார்வையின் வெளிப்பாட்டை தேசத் துரோகம் என்று கூற முடியாது” எனக் கூறி, ஃபாரூக் அப்துல்லாவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் இது விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட மனு எனக் கூறி, மனு தாக்கல் செய்யதவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.

 

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370ஐ, சீனா அல்லது பாகிஸ்தான் உதவியோடு திரும்பப் பெறுவோம் என ஃபாரூக் அப்துல்லா கூறவில்லை என அவரது தரப்பு ஏற்கனவே விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.