Advertisment

லிங்குசாமியின் 'பையா 2' - மூன்றாவது முறையாக தமிழில் நடிக்கும் விஜய் பட நடிகை

paiyaa 2 poja hegde is pair to arya

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் 'பையா'. லிங்குசாமி இயக்கிதயாரித்த இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்றும் பல யுவன் ரசிகர்களின் பிளே லிஸ்ட்டை இப்பட பாடல்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

Advertisment

லிங்குசாமி12 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டுள்ளதாகசமீபத்தில் தகவல் வெளியானது. அதில் கார்த்திக்கு பதில் ஆர்யா நடிப்பதாகவும் கதாநாயகியாக ஜான்வி கபூரும் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்பட்டது. ஆனால் ஜான்வி கபூர் எந்த ஒரு தமிழ்ப் படத்திலும் இதுவரை கமிட்டாகவில்லை என அவரது தந்தையும் தயாரிப்பாளருமான போனி கபூர் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில் 'பையா 2' படத்தின் கதாநாயகி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பூஜா ஹெக்டேவை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாகவும் இது தொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஜீவாவின் 'முகமூடி' படம் மூலம்திரைத்துறையில் அறிமுகமான பூஜா ஹெக்டே பின்பு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்திய நிலையில் விஜய்யின் 'பீஸ்ட்' படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். இப்போது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வரும் பூஜா ‘பையா 2’ வில் நடிக்கும் பட்சத்தில் அவருக்கு இது மூன்றாவது தமிழ் படமாக அமையும். முதல் இரண்டு படங்கள் தோல்வியைத்தழுவியதால் இப்படம் அவருக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

pooja hegde Actor Arya directorlingusamy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe