maniyarfamily

padithavudan kizhithu vidavum

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

ஐ கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் R.உஷா தயாரித்திருக்கும் படம் 'படித்தவுடன் கிழித்துவிடவும்'. கூல்சுரேஷ், பிரதீக், ஸ்ரீதர், சீனி ஆகிய நால்வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளஇப்படத்தில் பான்பராக் ரவி, காதல் சரவணன், நெல்லை சிவா, ரோஜாபதி, சபிதா, ஜெனிபர், சுபாஷி, சுமா, அனிதா, சிறுவன் தனுஷ், சுரேஷ்குமார் ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். நிரோ பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்தை செ.ஹரிஉத்ரா இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் செ.ஹரிஉத்ரா பேசும்போது...."இன்று பரபரப்பான வாழ்க்கை சூழலில் நாம் சில விஷயங்களை செய்வதோடு விட்டுவிடுகிறோம். அப்படி விட்டுவிடுகிற ஒரு முக்கியமான விஷயம் இன்று நாம் வாங்கும் செல்போனிற்கு கூட செய்கிறோமே அந்த இன்சூரன்ஸ் தான். அதைபற்றிய ஒரு சிறு பயணம் தான் இந்த 'படித்தவுடன் கிழித்துவிடவும்'. இன்சூரன்ஸ் இன்று நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அப்படி நாம் செய்யும் இன்சூரன்ஸ் தொகையை வாங்க நாமும் முறையிடுவது இல்லை சம்மந்தப்பட்ட கம்பெனிகளும் அதை மக்களுக்கு அதிகமாக தர முன்வருவதும் இல்லை.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இதனால் கிட்டத்தட்ட பல லட்சம் கோடி ரூபாய் மக்கள் பணம் முடங்கி உள்ளன. அப்படி ஒரு அரசியல்வாதியால் இன்சூரன்ஸ் மோசடி செய்யப்பட்டு இறந்தவர்களின் ஆவிகள் மனிதர்களின் துணை கொண்டு எப்படி அந்த அரசியல்வாதியை பழிவாங்கியது என்பதை காமெடி கலந்து கமர்ஷியலாக உருவாகியுள்ளது இந்த 'படித்தவுடன் கிழித்து விடவும்' படம். பிளாஸ்டிக் தொழிற்சாலை கதையின் முக்கிய கதாபாத்திரமாக இக்கதை உள்ளதால் மன்னார்குடி பகுதியில் மிக பிரமாண்டமான பிளாஸ்டிக் தொழிற்சாலை செட் அமைத்து படமாக்கினோம். 90 சதவீதம் படப்பிடிப்பு இரவில் மட்டுமே நடத்தியிருக்கிறோம். அதற்காக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட் ஹீலியம் என்ற புதுவகையான கேமராவை பயன்படுத்தியுள்ளோம். அது இரவு நேர படப்பிடிப்பு காட்சிகளை மிக துல்லியமாக படம்பிடித்துள்ளது. படப்பிடிப்பு மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது" என்றார் இயக்குனர் செ.ஹரிஉத்ரா.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">