Skip to main content

‘உன் முகத்த பார்கலையே...’ - கவனம் பெறும் இளையராஜா எழுதிய பாடல் 

Published on 01/12/2024 | Edited on 01/12/2024
padathalaivan first single ilaiyaraaja lyrics Un Mugathai Paarkkalaiyae song released

தே.மு.தி.க முன்னாள் தலைவர் மறைந்த விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இளையராஜா இசையில் யு. அன்புவின் இயக்கத்தில் ‘படை தலைவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீடியோவுடன் வெளியானது. அந்த வீடியோ பார்வையாளர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்திலிருந்து சண்முக பாண்டியனின் பிறந்தநாளான கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி வாழ்த்து வீடியோ வெளியாகியது. 

இதையடுத்து இப்படம் கடந்த செப்டம்பரில் வெளியாவதாக அறிவித்து பின்பு சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடல் ‘உன் முகத்த பாக்கலையே...’ லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இப்பாடலை அநன்யா பட் பாடியுள்ளார். மேலும் இளையராஜா வரிகள் எழுதியுள்ளார். இப்படல் தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. இப்படத்தை தவிர்த்து பொன்ராம் இயக்கத்தில் ஒரு நடிக்க கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்