'பாபஞ் செய்யாதிரு..." - பாடலை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

Paapam Seiyathiru Lyrical Video released

‘ஒத்த செருப்பு அளவு 7’படத்திற்குப்பிறகு பார்த்திபன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'. இப்படம் 96 நிமிடங்கள் ஒரேஷாட்டில்படமாக்கப்பட்டுள்ளது. நான் லீனியர் திரைக்கதை முறையில்சிங்கிள்ஷாட்டில்எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைபெற்ற நிலையில் தற்போது அடுத்த பாடலான'பாபஞ் செய்யாதிரு..." என்ற பாடலை இயக்குநர்லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்பாடலை கடுவெளி சித்தர் வரிகளில்நிரஞ்சனா ரமணன், கீர்த்தனா வைத்தியநாதன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இப்படம் வரும் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ACTOR PARTHIBAN iravin nizhal lokesh kanagaraj
இதையும் படியுங்கள்
Subscribe