திறமையான இயக்குநர்களுக்கு ஒரு களம்; ஷார்ட் கண்டண்ட் தளத்தில் ‘பானிபூரி’ 

Paani Poori Press Meet

ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், ஷார்ட் ஃபிலிக்ஸ் வழங்கும் படம் ‘பானிபூரி’ . இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இந்நிகழ்வில் படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதில் ஷார்ட்ஃபிலிக்ஸ் பரணிதரன் பேசியதாவது, “ஷார்ட்ஃபிலிக்ஸ் என்பது ஷார்ட் கண்டண்டுக்கான ஒரு தளம். இதன் மூலம் திறமையான பல இயக்குநர்களுக்கு களம் அமைத்து தர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதை ஆரம்பித்தோம். ’பானிபூரி’ அதன் தொடக்கமாக இருக்கும். இது முழுக்க முழுக்க பாலாஜியின் ரெசிப்பி தான். நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். ஆதரவு கொடுங்கள்” என்றார்.

ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜெய்சன் பேசியதாவது, “ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் படங்கள் எடுத்திருக்கிறோம். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் படங்கள் எடுத்துள்ளோம். 'பானிபூரி' கதையை பாலாஜி சொன்னதும் உடனே எடுத்து விடலாம் என்று சொல்லி விட்டேன். கதை நன்றாக வந்திருக்கிறது. ஷார்ட்ஃபிலிக்ஸ் வரும் காலத்தில் பெரும் வெற்றி பெறும். இதில் நடித்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள்”.

Paani Poori movie PRESS MEET
இதையும் படியுங்கள்
Subscribe