Advertisment

“குடிச்சு குடிச்சு குடும்பம் நாசமா போகுது...” - பா. ரஞ்சித்தின் ‘பாட்டல் ராதா’ டீசர் வெளியீடு!

Pa. Ranjith's 'Bottle Radha' Teaser Released!

அட்டக்கத்தி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் முன்னணி இயக்குநராக வலம்வருபவர் இயக்குநர் பா.ரஞ்சித். இவர், மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை எனத்தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். இவருடைய இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ விரைவில் திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது.

Advertisment

இயக்குநராக வெற்றி பெற்ற பா.ரஞ்சித், அதே நேரம் நீலம் புரொடக்‌ஷன் மூலமாக தயாரிப்பாளராகவும் பல நல்ல படங்களைக் கொடுத்துள்ளார். பரியேறும் பெருமாள், ரைட்டர், புளூஸ்டார், எனப் பல படங்களை தயாரித்துள்ளார். தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும், ‘பைசன்’ படத்தை தயாரித்து வருகிறார்.

Advertisment

இந்த நிலையில், நடிகர் குரு சோமசுந்தரம் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் ‘பாட்டல் ராதா’ படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன், ஆண்டனி உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது இந்தபடத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

அதில், மதுப்பிரியராக வரும் குரு சோமசுந்தரம், ‘குடிச்சு குடிச்சு என் குடும்பம் நாசமாக போகுது. அந்தக் கவலை தான் சார்’ என்ற வசனமும், ‘ஊர்பூறா டாஸ்மாக்க தொறந்து வச்சுட்டு குடிக்கிறவன குத்தம் சொல்றது’ என்ற வசனமும் இந்த டீசரில் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/b5n7exNUeec.jpg?itok=E4mwtGjQ","video_url":" Video (Responsive, autoplaying)."]}

guru somasundaram Pa Ranjith
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe