காடு, புலி, வேட்டை... புதிய தளத்திற்கு நகரும் பா.ரஞ்சித்

pa ranjith vettuvam movie first look goes viral

'சார்பட்டா பரம்பரை' படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித்காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் நடிப்பில் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தை இயக்கி முடித்துள்ளார். இதையடுத்து விக்ரம் நடிக்கும் 'சியான் 61' படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே இயக்குநர் பா.ரஞ்சித் 'வேட்டுவம்' என்ற புதிய படத்தை எழுதி இயக்கவுள்ளார். இதில் ‘வேட்டுவம்’ படத்தை கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் உலக புகழ் பெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில்வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. போஸ்டரில் புலி மற்றும் காடுகள் இடம் பெற்றுள்ளதால்அதைசார்ந்தபடமாக இருக்க கூடும் என கூறப்படுகிறது. விளையாட்டு, அதிகாரத்திற்கு எதிரான கதைகளில்பயணித்த பா.ரஞ்சித் அடுத்ததாககாடு, புலி, வேட்டை என்று புதிய தளத்தை கையில் எடுத்துள்ளார்.இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுடப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Pa Ranjith tamil cinema vettuvam
இதையும் படியுங்கள்
Subscribe