Advertisment

உலக புகழ்பெற்ற திரைப்பட விழாவில் வெளியாகும் பா. ரஞ்சித் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Pa Ranjith  Vettuvam first look poster release Cannes Film Festival

'சார்பட்டா பரம்பரை' படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித்காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் நடிப்பில் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தை இயக்கி முடித்துள்ளார். இதையடுத்து விக்ரம் நடிக்கும் 'சியான் 61' படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

இதனிடையே இயக்குநர் பா.ரஞ்சித் 'வேட்டுவம்' என்ற புதிய படம் மற்றும் வெப் தொடர் ஒன்றையும் எழுதி இயக்கவுள்ளார். இதில் ‘வேட்டுவம்’ படத்தை கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Advertisment

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற உள்ள உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில்'வேட்டுவம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

tamil cinema cannes film festival Pa Ranjith
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe