ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் மேஜிக்கல் ரியலிஸம்... எதிர்பார்ப்பை எகிற வைத்த பா.ரஞ்சித் டீம்! 

11:47 AM Oct 23, 2020 | santhoshkumar

ADVERTISEMENT

ADVERTISEMENT

நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில், இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில், வெளியான 'பரியேறும் பெருமாள்', 'குண்டு' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பையும், வெற்றியையும் பெற்றது.

இப்படங்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து தயாரிப்புப் பணிகளில் இந்நிறுவனம் ஈடுபட்டு வரும் நிலையில், நடிகர் கலையரசன், அஞ்சலிப்பாட்டில் நடித்த 'குதிரைவால்' என்கிற படத்தை வெளியிடுவதாக நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

'குதிரைவால்' படம் ரெகுலரான சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக வந்திருக்கிறது. மேஜிக்கல் ரியலிஸம் என்று சொல்லப்படும் ஜானரில் எடுத்திருப்பதாக படக்குழு தெரிவித்தது. இது தமிழ் சினிமாவிற்கு முற்றிலும் புதிது என்று சொல்லலாம். அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் - ஷ்யாம் சுந்தர் இயக்கியிருக்கிறார்கள், ராஜேஷ் எழுதியிருக்கிறார்.

உளவியல், ஆழ் மனக் கற்பனைகள் மற்றும் டைம் டிராவல் குறித்த ஒரு அறிவியல் புனைவுப்படமாகவும், வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டதாகவும், மேஜிக்கல் ரியலிச சினிமாவாகவும் இந்தப் படம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே ஒரு புதிய முயற்சியாக, இப்படம் உருவாக்கப் பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் கிராஃபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. யாழி பிலிம்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சுந்தரேசன் இப்படத்தை தயாரித்திருக்கிறார். அண்மையில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT