/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/EtcMInxVoAEWyH9.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா.ரஞ்சித், தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்சன்ஸ் மூலம் நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தயாரித்து வருகிறார். அவர் தயாரிப்பில் வெளியான 'பரியேறும் பெருமாள்', 'இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு' ஆகிய படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது அவரது தயாரிப்பில் 'குதிரைவால்', 'ரைட்டர்', 'பொம்மை நாயகி', 'சேத்துமான்' உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகின்றன. இதில் சில படங்களின் பணிகள் நிறைவுற்று ரிலீசுக்குத் தயாராக உள்ளன. எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள சேத்துமான் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கியுள்ளார். இப்படமானது கேரளாவில் நடைபெற உள்ள திரைப்பட விழாவில் திரையிடதேர்வு செய்யப்பட்டுள்ளது. படத்தின் திரையிடல் பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தகவலை இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)