Advertisment

பா.ரஞ்சித் - சமுத்திரக்கனி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

Pa. Ranjith

அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித், பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். அதனைத்தொடர்ந்து, தன்னுடைய நீலம் தயாரிப்பு நிறுவனம் மூலம் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என்ற படத்தையும் தயாரித்து வெற்றி கண்டார். தற்போது நடிகர் ஆர்யாவை வைத்து சார்பட்டா படத்தை இயக்கும் பணிகளில் மும்மரமாக உள்ள ரஞ்சித், தன்னுடைய அடுத்த படத் தயாரிப்பு குறித்து ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

Advertisment

கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ப்ரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு 'ரைட்டர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.

Advertisment

samuthirakani Pa Ranjith
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe