/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/6_47.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, காளி வெங்கட், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் 'சார்பட்டா பரம்பரை'. இப்படத்தை கே 9 ஸ்டூடியோஸ் மற்றும் நீலம் ப்ரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. வடசென்னை மக்களிடையே பிரபலமாக இருந்த குத்துசண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வரும் ஜூலை 22ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இயக்குநர் ரஞ்சித்தின் அடுத்த படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முழுக்க முழுக்க காதல் பின்னணியில் தன்னுடைய அடுத்த படத்தை ரஞ்சித் இயக்கவுள்ளார். அப்படத்திற்கு 'நட்சத்திரம் நகர்கிறது' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பா.ரஞ்சித் தெரிவித்தார்.
பா.ரஞ்சித் தன்னுடைய அறிமுகப்படமான அட்டகத்தியை காதல் பின்னணியில் உருவாக்கியிருந்த நிலையில், தற்போது மீண்டும் காதல் பின்னணி கொண்ட கதைக்களத்தை தேர்ந்தெடுத்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)