style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
பா.இரஞ்சித் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் இவர் அடுத்ததாக தயாரிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை வெளியிடுவதாக முன்னர் அறிவித்திருந்த நிலையில் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி 'குண்டு' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கவுள்ளார். இதற்கிடையே பா.இரஞ்சித் அடுத்ததாக இந்திய சுதந்திர போராட்டத் தியாகியும், பழங்குடியின மக்களின் சுதந்திரதத்திற்கு போராடிய பிர்சா முண்டாவின் வாழ்க்கையை மையப்படுத்தி பாலிவுட் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.