(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இயக்குனர் பா.இரஞ்சித் திரைப்படங்களை இயக்குவதோடு தயாரிப்பாளராகவும் இயங்குகிறார். சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி படமாகிய 'பரியேறும் பெருமாள்' படத்தை தயாரித்ததோடு அடுத்து தனது தயாரிப்பில் ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’படத்தையும் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில்தனது கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்இசைக்குழுவினரின்'மகிழ்ச்சி' ஆல்பத்தில்இசையமைத்த பாடலை இயக்கியுள்ளார். நடன இயக்குனர் சாண்டியின் நடனத்தில் கேஸ்ட்லெஸ் இசைக்குழுவினரை நடிக்க வைத்திருக்கிறார். மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தபடப்பிடிப்பு சினிமா படத்தின் பாடலுக்கு செலவாகும் பொருட்ச்செலவில் படமாக்கப்பட்டுள்ளது. ’மகிழ்ச்சி’ என்று துவங்கும் இந்தப் பாடலில் நடிகர் கலையரசன், லிங்கேஷ், ஹரி, சாண்டி மற்றும் குழுவினர் பங்குபெற்றுள்ளனர். 'மகிழ்ச்சி' ஆல்பத்தில் மொத்தம் எட்டு பாடல்கள் வெளியாகியிருக்கிறது.