அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் பா.ரஞ்சித். இதனை தொடர்ந்து கார்த்தியை வைத்து மெட்ராஸ், ரஜினியை வைத்து கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

Advertisment

pa ranjith

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

காலா படத்திற்கு பிறகு பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து பாலிவுட்டில் பெரும் பொருட்செலவில் படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அந்த படம் தற்போது கைவிடப்பட்டதால் ஆர்யாவை வைத்து சல்பேட்டா என்றொரு படத்தை இயக்குகிறார்.

இதனிடையே நீலம் என்ற அவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக ஐந்திற்கும் மேற்பட்ட படங்களை தயாரிக்க திட்டமிட்டிருப்பதை அறிவித்திருந்தார் பா.ரஞ்சித்.

Advertisment

இந்நிலையில் பா.ரஞ்சித்திற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு மிளிரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பா.ரஞ்சித்-அனிதா தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.